திருநெல்வேலி உள்ள அம்மா உணவகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு அமர்ந்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளன்னர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலையில்...திருநெல்வேலி டவுன் பர்வதசிங்க ராஜா தெருவில் அமைந்துள்ள அம்மா உணவகம் பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பெரும் உதவியாக இருந்த அம்மா உணவகம்அம்மா உணவகம் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக 2012ஆம் ஆண்டு தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. ஏழை மற்றும் எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. பேரிடர் காலங்களிலும் இந்த அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்தன.பலர் உணவு அருந்திய உணவகம்கொரோனா ஊரடங்கு காலத்தில் பல ஓட்டல்கள் மூடப்பட்டிருந்த சூழலில் கூட அம்மா உணவகங்கள் செயல்பட்டு, ஏழை–பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி பலர் உணவு அருந்தியதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மாநகரில் மொத்தம் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.அடிப்படை வசதிகள் இல்லைஇந்நிலையில், திருநெல்வேலி டவுன் பர்வதசிங்க ராஜா தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் தினமும் சுமார் 300 பேருக்கு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் தற்போது அங்கு சுமார் 50 பேர் மட்டுமே உணவு அருந்த வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக அந்த உணவகத்தில் குடிநீர் வசதி இல்லாதது, கை கழுவ தண்ணீர் கிடைக்காதது, ஃபேன் மற்றும் லைட் வசதி இல்லாதது போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமை காரணமாக பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனர். சீலிங் உடைந்து எந்த நேரத்திலும் உணவில் விழும் அபாயம் மேலும், உணவகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு அமர்ந்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். உணவக நுழைவாயிலில் உள்ள படிக்கட்டு உடைந்து கிடப்பதால் முதியோர் மற்றும் பெண்கள் சிரமப்பட்டு உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல், அம்மா உணவகத்தில் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களின் தரைகள் பெயர்ந்து சேதமடைந்துள்ளதுடன், மேற்கூரைகள் மற்றும் சீலிங் உடைந்து எந்த நேரத்திலும் உணவில் விழும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.பழுதான கிரைண்டர் இதற்கிடையில், இட்லிக்கு மாவு அரைக்கும் கிரைண்டர் பழுதடைந்த நிலையில் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் அம்மா உணவக ஊழியர்கள் தங்களது சொந்த செலவில் பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வேறு கடைகளில் இருந்து மாவு வாங்கி இட்லி தயாரித்து விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Related Link பேருந்து சேவை மக்களுக்குதானே?