news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தவெக அரசுக்கு சவால் விட்ட தங்கம் தென்னரசு
tv

Also Watch

tv

Read this

தவெக அரசுக்கு சவால் விட்ட தங்கம் தென்னரசு

ரூ.11,000 கோடி வரவில்லை

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாங்கள் வாங்கிய கடனை விட தவெக குறைவாக வாங்கினால் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.

தங்கம் தென்னரசு சவால்
தவெக அரசு சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது;
தமிழகத்தின் கடன்,இரண்டு மடங்காக முந்தைய ஆட்சிகளிலும் உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக அனைத்து ஆட்சிகளிலும் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
தவெக 5 ஆண்டுகள் ஆட்சியை முடித்தால் தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும்.நாங்கள் வாங்கிய கடனை விட தவெக குறைவாக வாங்கினால் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

யாரை காப்பாற்றும் முயற்சி?
ஐந்து ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? 15 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு 2021ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. முந்தைய ஆட்சிகள் பற்றி தற்போதைய வெள்ளை அறிக்கையில் இல்லாதது யாரை காப்பாற்றுவதற்காக?

ரூ.11,000 கோடி வரவில்லை

நிதி மேலாண்மையை சரியாக செய்யவில்லை, அதனால் தான் இவ்வளவு கடன் வந்தது என்ற பொய்யான பிம்பத்தை மக்களிடத்தில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். திமுக ஆட்சியில் அரசுக்கு வர வேண்டிய GST வருவாய் ரூ.11,000 கோடி வரவில்லை. ஒன்றிய அரசின் நிதி குறைப்பு காரணமாக வருவாய் பாற்றாக்குறை ஏற்பட்டது. ஒன்றிய அரசு GST வரி விதிப்பில் மாற்றங்களை கொண்டு வரும்போது, பொருள் விற்பனையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.

வெள்ளை அறிக்கை - வெற்று அறிக்கை
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கை, இயலாமையை மூடிமறைக்கும் யுக்தியாக தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.

Related Link
வெளியானது வெள்ளை அறிக்கை, நிதி சீரமைப்பில் திமுக அரசு தோல்வி

வெளியானது வெள்ளை அறிக்கை, நிதி சீரமைப்பில் திமுக அரசு தோல்வி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக அரசுக்கு சவால் விட்ட தங்கம் தென்னரசு

14
1 hr 14 mins agoshare
தவெக அரசுக்கு சவால் விட்ட தங்கம் தென்னரசுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved