Also Watch
Read this
தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ, இல்லையோ, அடுத்த கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை கொள்முதல் செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடி உள்ளார்.

ஏன் தான் இவர்களுக்கு வாக்களித்தோமோ என மக்கள் வருந்தும் அளவுக்கு சோஃபா மாடல் ஆட்சி நடந்து வருவதாகவும் விமர்சித்து உள்ளார்.

ஆற்காடு வீராசாமி இல்ல திருமண நிகழ்ச்சி
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

இப்படிப்பட்ட சோஃபா மாடல் ஆட்சிக்கு ஏன் தான் வாக்களித்தோமோ? என்று மக்கள் தினம் தினம் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் 2021ல் திமுக ஆட்சி அமைத்த போது, இந்த அரசுக்கு வாக்களிக்காமல் விட்டு விட்டோமே, என்று திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட வருத்தப்பட்டனர்.

மீண்டும் திமுக ஆட்சி
சோஃபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமது சமூக வலை தள பக்கத்தில், Four-seater sofa upgraded to five-seater sofa என பதிவிட்டு, தவெக அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.