Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் செயல்படுத்தப்படும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை, நந்தனத்தில் மெட்ரோ ரயில் நிறுவன கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணி ஆணைகளை வழங்கி பேசிய உதயநிதி, இத்திட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் 35 துறைகளில் வழங்கப்படும் பயிற்சியில், இலங்கை மறுவாழ்வு முகாம்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மனநல சிகிச்சை பெற்று மீண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் உள்ளதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.