Also Watch
Read this
By: Manigandan Raja

சுமார் 7.5 கோடி தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது 152 தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால் சுமார் ஏழரை கோடி தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இத்தகைய வழக்குகளில் ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.
உணவகங்களில் உணவுக்கான மெனு கார்டுகள் இருப்பதைப் போலவே, பல்வேறு தேர்வுத்தாள்களுக்கும் மெனு கார்டுகள் உள்ளதாக ராகுல் கடுமையாக சாடினார்.
நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியலில் குஜராத் முதலிடம்

தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் என நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியலில் குஜராத் முதலிடம் பிடித்துள்ளது. உள்கட்டமைப்பு திறன், திறமையான மனிதவள ஆற்றல் அளவு, அமைப்பு திறன், நிதி ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மீள்தன்மை மற்றும் ஒழுங்கு ஆகியவற்றின் அடிப்படையில் முதலீடுகளை நீண்ட காலம் ஈர்க்கும் இந்தப் பட்டியலை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளது.
அரசு ஊழியர்களின் பணி மாறுதல் விதிகளில் மாற்றம்

மேற்கு வங்க அரசு ஊழியர்களின் பணி மாறுதல் விதிகளில் அம்மாநில அரசு அதிரடி மாற்றம் செய்துள்ளது. நிர்வாக திறனை மேம்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் களப்பணி அதிகாரிகள் இனி தங்களின் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண பிரிவுகளில் உள்ள அதிகாரிகள் ஒரு இடத்தில் அதிகபட்சமாக 3 முதல் 4 ஆண்டுகள் வரை மட்டுமே பணியாற்ற முடியும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved