news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்
tv

Also Watch

tv

Read this

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

PM Modi

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

மொத்தம் 24 திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி :

உலக சுற்றுச்சூழல் தினத்தை குஜராத்திற்கு பிரதமர் மோடி 18 ஆயிரத்து 778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வழங்கினார். சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியி பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்தம் 24 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

டாமனில் ரூ.2,970 கோடிக்கும் அதிகமான நலதிட்டங்கள் :

டாமனில் 2 ஆயிரத்து 970 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்தத்த பிரதமர் மோடி , புதிய திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார்.

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அதே வேளையில், 'சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்' என்ற பாதையில் நாடு அசைக்க முடியாத உறுதியுடன் தொடர்ந்து வேகமாக முன்னேறுவதாக கூறினார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுத்தேர்தல் நடத்தும் பாகிஸ்தான் :

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியாவுக்கு சொந்தமான, கில்ஜிட் பல்திஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ள பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியையும் இந்திய அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி :

ஜூலை மத்தியில் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி அமலுக்கு வரும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்காவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பும் வேகமாகச் செயல்பட்டு வருவதாக கூறினார்.

நாட்டின் முதல் இ85 பெட்ரோல் நிலையம் :

இ 85 எரிபொருளை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிமுகம் செய்தார். இதன் விலை லிட்டருக்கு 82 ரூபாய் 12 பைசா மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ 20 எரிபொருளை விட சுமார் 20 ரூபாய் விலை குறைவாக உள்ள இ85 பெட்ரோலை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க, 2027ஆம் ஆண்டிற்குள்ள 500 இ85 பெட்ரோல் பங்குகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Related Link
பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக - அதிமுக கூட்டணி கட்டுக்கதை, இபிஎஸ் முதல்முறை விளக்கம்

2
10 mins agoshare
தவெக மீது பாய்ச்சல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau