Also Watch
Read this
By: Web Team

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. நகரின் பல இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஹோட்டல்கள் மற்றும் தர்மசாலைகளில் தங்கும் நபர்களின் தரவுகளை போலீசாருக்கு வழங்குமாறும் அயோத்தியா காவல் கண்காணிப்பாளர் சக்ரபாணி திரிபாதி தெரிவித்தார். நகருக்குள் கூட்டம் கூடாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதனிடையே வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டதாகவும், வாகன சோதனை நடப்பதாகவும் வாரணாசி துணை காவல் ஆணையர் சரவணன் தங்கமணி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved