Also Watch
Read this
By: Manigandan Raja

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொன் குன்னம் சந்திப்பானது ஒரு பரபரப்பான ஒரு பகுதியாகும் இந்த நிலையில், அந்த சந்திப்பின் வழியாக ஆம்புலன்ஸ் நோயாளியுடன் அவசரமாக சாலையில் சென்று கொண்டிருந்தது அப்போது பொன் குன்னம் சந்திப்பில் நெருங்கும்போது ஒருவர் சாலையை கடப்பதற்கு முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் அவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது, இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் தமிழ்நாடு தேனி மாவட்டத்தை 67 வயதான முருகதாஸ் என்ற சங்கர பாண்டியன் என தெரிய வந்தது.
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோட்டையம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர், இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.