Also Watch
Read this
By: Web Team

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. தேவஸ்தானம் சார்பில், அலங்கார மின்விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்கள் திருமலை மாடவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அலங்கார மின்விளக்கு தோரணங்களும், தசாவதாரம் உருவ அமைப்புகளும், வெங்கடேச பெருமாள் சுவாமியின் உருவ அமைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. மின்விளக்குகளின் அலங்காரம் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.