Also Watch
Read this
By: Manigandan Raja

தப்பிக்க முயன்றபோது என்கவுண்டர் :
உத்தர பிரதேசத்தில் யூடியூபரை கத்தியால் குத்திய நபர் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இஸ்லாம் குறித்து விமர்சன கருத்துக்களை தெரிவித்த யூடியூபர் சலீம் வாஸ்டிக், காஜியாபாத்தில் அவரது வீட்டில் வைத்து இருவரால் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் அளித்த புகாரில் போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வந்தனர். அதில் ஒருவர் காசியபாத்தில் மறைந்திருப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றபோது, அவர்களிடம் சிக்காமல் இருக்க தப்பியோடிய ஜீஷான் என்கவுண்டரில் சுடப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved