Also Watch
Read this
By: Web Team

ஜி.எஸ்.டி வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியாவில் சிறிய ரக ஹேட்ச்பேக் முதல், நடுத்தர எஸ்.யூ.வி வரை கார்கள் விலை கணிசமாக குறைகிறது.
ஜி.எஸ்.டி 2.0 படி 4 மீட்டர் நீளத்திற்குள், 1,200 சிசி இன்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் கார்கள் மற்றும் 1,500 சிசி இன்ஜின் திறன் கொண்ட டீசல் கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் டாடா பஞ்ச், மாருதி சுசூகி ஸ்விஃப்ட், டிசைர், ஹூண்டாய் எக்ஸ்டர், மகிந்தரா XUV 3XO, டாடா ஆல்ட்ரோஸ், கியா சோனெட் போன்ற கார்களின் விலை கணிசமாக குறைகிறது.
அதே போல் நடுத்தர பிரீமியம் கார்கள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 22 சதவீத செஸ் வரி நீக்கப்பட்டு, 40 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்படுவதால், அவற்றின் விலையும் குறைகிறது.