Also Watch
Read this
By: Web Team

போதை பழக்கத்தால் பஞ்சாப் கிராமங்களில் கைம்பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறிய பாஜக எம்.பி கங்கனா ரணாவத்துக்கு, அம்மாநில ஆம் ஆத்மி அமைச்சர் ஹர்பல் சீமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபை விட குஜராத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் என்றும், முதலில் குஜராத்தை பற்றி பேசுங்கள் எனவும் கூறிய அவர், எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிப்படை அறிவின்றி கங்கனா கண்டதையும் பேசி வருவதாக விமர்சித்தார்.
முன்னதாக பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் போதைப் பொருட்கள் இமாச்சல் இளைஞர்களை சீரழிப்பதாகவும், இது தொடர்ந்தால் பஞ்சாப் கிராமங்களை போலவே இமாச்சலிலும் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கங்கனா பேசியிருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved