Also Watch
Read this
By: Web Team

ஆசிய கண்டத்தின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இந்தியாவின் சுரேகா யாதவ், வரும் 30ம் தேதி ஓய்வு பெற உள்ளார். 1988ஆம் ஆண்டு இந்தியன் ரயில்வேயில் சேர்ந்த அவர், கடந்த 36 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் அதிவேக ரயில் என கூறப்படும் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் பைலட் என்ற பெருமையும் இவரை சேரும்... பாலின வேறுபாடு, தொழிலில் பெண்களுக்கான சவால்கள் என பலவற்றை உடைத்தெறிந்து, எண்ணற்றக் கனவுகளுடன் இருக்கும் மகளிருக்கு நல் வழிகாட்டியாக மாறியிருக்கும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள் : நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு 5ஆவது நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved