Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வர இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில், டிரம்பின் வரி விதிப்பின் முன்பாக பிரதமர் மோடி மண்டியிட்டு பணிந்து விடுவார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறி வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஜூலை 9 ஆம் தேதிக்குள் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பியூஷ் கோயல் வேண்டுமானால் தமது நெஞ்சை நிமிர்த்தி வைத்துக் கொண்டாலும் டிரம்பின் முன் மோடி மண்டியிடுவது உறுதி என தமது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved