Also Watch
Read this
By: Web Team

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மலையாள டிவி விவாதம் ஒன்றில் பேசிய முன்னாள் ஏபிவிபி தலைவரான பிரிந்து மகாதேவ் (( Printu Mahadev)) என்பவர் ராகுல் காந்தி மார்பிலேயே சுட்டுக்கொல்லப்படுவார் என கொலை மிரட்டல் விடுத்துள்ளது, ராகுல் காந்தியின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கி உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் இந்த கொலை மிரட்டலை ஆதரிக்கப் போகிறீர்களா அல்லது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்களா என காங்கிரஸ் அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved