Also Watch
Read this
By: Web Team

ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உதம்பூரில் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நமது வடக்கு எல்லை பகுதியை பாதுகாப்பதில் முக்கிய இடத்தை பிடித்துள்ள உதம்பூரில் வீரர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்புப்படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து அவர் உணவருந்தி மகிழ்ந்தார். நிகழ்ச்சியின்போது, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியும் உடனிருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.