news-tamil-logo

3/19/2026, 2:46:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews அடைக்கலம் கொடுத்தவருக்கு நேர்ந்த கதி
tv

Also Watch

tv

Read this

அடைக்கலம் கொடுத்தவருக்கு நேர்ந்த கதி

போபால், மத்திய பிரதேசம்

Posted on: Feb 18, 2026 09:44 AM

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கட்டி முடிக்கப்படாத வீட்டிற்குள் கிடந்த பெண் சடலம். மார்பு, வயிற்று பகுதி என 13 இடங்களில் கத்தியால் குத்திக்கிழித்த பயங்கரம். 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தும் அடங்காத வெறி. அடைக்கலம் கொடுத்தவரின் கதையையே முடித்த சைக்கோ. நடந்தது என்ன?

துர்காவின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
பிப்ரவரி 16, மதிய நேரம். போபால் கௌதம் நகர்ல கட்டி முடிக்கப்படாத ஒரு வீடு வழியா மூணு பேரு நடந்து போயிருக்காங்க. அப்படி போனவங்க தற்செயலா அந்த பாழடைஞ்ச கட்டடத்துக்குள்ள பாத்தப்ப, ஒரு பெண் ரத்த வெள்ளத்துல சடலமா கிடந்துருக்காங்க. அவங்க வேற யாரும் இல்ல அதே ஏரியாவ சேர்ந்த துர்கா-ங்குற பெண் தான் சடலமா கிடந்திருந்தது. விஷயம் தெரிஞ்சதும் சொந்தக்காரங்க எல்லாரும் ஓடி வந்துருக்காங்க. அங்க துர்கா கிடந்த கோலத்த பாத்ததும் சொந்தக்காரங்க கதறி அழுதுருக்காங்க. அடுத்து, விஷயம் தெரிஞ்சு போலீஸ்காரங்க சம்பவ இடத்துக்கு வந்து பாத்தப்ப, துர்காவோட மார்பு பகுதி, வயிற்று பகுதின்னு மொத்தம் 13 இடங்கள்ல கத்திக்குத்து இருந்துருக்குது. அதுக்குப்பிறகு, அவங்க சடலத்த கைப்பற்றி, போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ், புலன் விசாரணையில இறங்குனாங்க.

பிரீதமின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃபில் இருந்ததால் சந்தேகம்
துர்கா கூட கடைசியா யாரு இருந்தாங்கன்னு கேட்டப்ப, அவங்க மருமகள் ஒரு விஷயத்த போலீஸ்கிட்ட சொல்லிருக்காங்க. அத்தை வீட்ல குடியிருந்த பிரீதம் கூட தான் பக்கத்து தெருவுல கட்டிட்டு வர்ற புது வீட்ட சுத்தம் பண்ணப் போறேன்னு சொல்லிட்டுப் போனாங்கன்னு சொல்லிருக்காங்க. ஆனா, பிரீதம் இங்க இல்லன்னு துர்காவோட மருமகள் சொல்லவே, போலீஸ்காரங்க அவரோட நம்பருக்கு ஃபோன் பண்ணாங்க. அப்ப, அவனோட ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வந்துருக்குது. இதுக்கு நடுவுல, போலீஸுக்கு ஒரு ஃபோன் கால் வந்துருக்கு. நிஷாத்புரா ரயில்வே தண்டவாளத்துல ஒருத்தர் ரயிலுல அடிபட்டு இறந்து கிடக்கார்னு சொல்ல, போலீஸ் உடனே போய் பாத்துருக்காங்க. அங்க இறந்து கிடந்தது வேற யாரும் இல்ல, போலீஸ் தேடிட்டு இருந்த பிரீதம்தான், ரயிலுல குதிச்சு தற்கொலை பண்ணிருக்கான். அதோட பிரீதமோட சட்டையில, துர்காவோட ரத்தக்கறை படிஞ்சிருந்துச்சு. அத வச்சு பாத்த காவலர்கள், பிரீதம் தான் துர்காவ கொலை பண்ணிட்டு ரயிலுல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டான்-ங்குறத உறுதிப்படுத்திருக்காங்க. துர்காவ எதுக்காக பிரீதம் கொலை செய்யணும்? அவங்களுக்குள்ள அப்படி என்ன பிரச்சனைன்னு போலீஸ் தோண்டித் துருவுனாங்க. அதுலதான், பல திடுக்கிடும் தகவல்களாம் தெரியவந்துச்சு.

15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த பிரீதம்
மத்திய பிரதேச மாநிலம், போபால (Bhopal) சேர்ந்த பிரீதமுக்கு மொத்தம் மூணு மகன்கள் இருந்தாங்க. கடந்த 15 வருஷத்துக்கு முன்னாடி குடும்ப பிரச்சணையால தன்னோட மூணு மகன்களையும் கொடூரமா கொலை பண்ணிருக்காரு. இது சம்பந்தமா அவரு மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ்காரங்க, பிரீதமா அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க. அதுக்கப்பிறகு, கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு அப்புறம் சிறை வாசத்த அனுபவிச்சிட்டு வெளியே வந்த பிரீதம் இருக்க இடம் இல்லாம தவியா தவிச்சிட்டு இருந்துருக்கான். அத பாத்த, துர்கா அவரு தங்குறதுக்காக வீடு கொடுத்திருக்காங்க. பாவம்னு பாத்து வீடு குடுத்தா, கொஞ்ச நாள்லேயே பிரீதம் மதுபோதையில அக்கம்பக்கத்துல உள்ளவங்ககிட்ட தகராறு பண்ணிருக்கான்.

பிரீதம் - துர்கா இடையே ஏற்பட்ட வாக்குவாதம்

அதனால, கோபமடைஞ்ச துர்கா, பிரீதமா வீட்ட காலி பண்ணுன்னு சொல்ல, ரெண்டு பேத்துக்கும் இடையில அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்குது. கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் இந்த மாதிரி பண்ண மாட்டேன் மா. என்ன மன்னிச்சிருங்கன்னு பிரீதம் சொல்லவே, துர்காவும் மன்னிச்சு விட்டுருக்காங்க. ஆனா, பிரீதம் அவங்க மேல கொலைவெறில இருந்துருக்கான். எல்லார் முன்னாடியும் வீட்ட காலி பண்ணுன்னு அசிங்கப்படுத்துனவள சும்மா விடக்கூடாதுன்னு நினைச்சவரு அவங்கள கொலை செய்ய முடிவு பண்ணிருக்கான்.

புதிய வீட்டை சுத்தம் செய்ய பிரீதமுடன் சென்ற துர்கா
அதுக்காக, வீட்டுல இருந்த துர்காவ, வெளியே கூப்பிட்ட பிரீதம், பக்கத்து தெருவுல உள்ள புது வீட்ட க்ளீன் பண்ணனும்னு சொன்னீங்கள மா. சுத்தம் பண்ணிட்டு வரலாமான்னு கேட்டுருக்கான். உடனே துர்காவும் வீட்டுல இருந்த மருமகள்கிட்ட சொல்லிட்டு, கட்டிட்டு வர்ற புதுவீட்டுக்கு பிரீதமோட போயிருக்காங்க. அங்க போன கொஞ்ச நேரத்துலேயே, தான் மறைச்சி வச்சிருந்த கத்திய எடுத்து, துர்காவ கண்மூடித்தனமா குத்திக் கிழிச்சிருக்கான். அதுக்குப்பிறகு, போலீஸுக்கு பயந்து, ரயில்வே தண்டவாளத்துல குதிச்சு தன்னோட உயிரையும் மாயிச்சிக்கிட்டான் பிரீதம். போலீசார் விசாரணையிலதான் மூதாட்டி துர்காவோட கொலைக்கு என்ன காரணம்-ங்குறது தெரியவந்துச்சு.

Related Link
எதிர் வீட்டுக்காரனுடன் எல்லை மீறிய உறவு

எதிர் வீட்டுக்காரனுடன் எல்லை மீறிய உறவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 58 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved