Also Watch
Read this
By: Web Team

பாபர் மசூதி போன்ற மற்றோர் பள்ளிவாசலை கட்டப்போவதாக சூளுரைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் அந்த கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் ஆறாம் தேதி, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டெங்காவில் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்போவதாக அவர் அறிவித்தார். இது சர்ச்சையான ஒரு செயல் என்பதாலும், இப்போது வேறு ஒரு பாபர் மசூதியை திடீரென கட்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்பதாலும், எம்எல்ஏ ஹுமாயூன் கபீரை திரிணாமுல் காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்தாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கட்சித் தலைமையின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள ஹுமாயூன் கபீர் அடுத்த மாதம் புதிய கட்சி ஆரம்பித்து 135 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved