Also Watch
Read this
தாய்லாந்தின் புக்கெட் தீவில், ஏர்-இந்தியா விமானம் தரையிறங்கிய போது முன்பக்க லேண்டிங் கியரில் பிரச்சனை ஏற்பட்டதால் பயணிகள் பீதி அடைந்தனர். ஹார்டு லேண்டிங் எனப்படும் விமானத்தின் அடிப்பாகம் தரை தட்டும் வகையில் தரை இறக்கிய போதும், 133 பயணிகள் உயிர் தப்பினர்.


ஐதராபாத் டூ புக்கெட்
ஐதராபாத்தில் இருந்து புக்கெட் சென்ற ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விமானம் தரை இறங்கும் போது, முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 VT-BWQ விமானம், புக்கெட்டில் தரையிறங்கிய போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் காரணமாக, விமானத்தின் முன்புற சக்கரம் கழன்று விட்டதாக கூறப்படுகிறது. விமானம் ஓடுதளத்தில் சிக்கியதால், புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்தால், பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved