news-tamil-logo

3/19/2026, 1:22:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 2026 இந்தியா AI இம்பேக்ட் உச்சிமாநாடு
tv

Also Watch

tv

Read this

2026 இந்தியா AI இம்பேக்ட் உச்சிமாநாடு

பாரத் மண்டபம், டெல்லி

Posted on: Feb 17, 2026 07:40 AM

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளது. டெல்லியில் நடைபெறும் "இந்தியா AI இம்பேக்ட்" உச்சிமாநாடு, உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது. உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

இந்தியாவின் குரலை உலகிற்கு பறைசாற்றும் விதமாக...
டெல்லி, பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்தியா AI இம்பேக்ட் உச்சிமாநாடு, இந்தியாவை உலகளாவிய AI விவாதங்களின் மையப்புள்ளியாக மாற்றவுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்டோருடன், சர்வதேச அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

AI தொழில் நுட்பம் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளின் போக்கையே மாற்றி அமைத்து வரும் சூழலில், அதனை நிர்வகிப்பது மற்றும் பரவலாக்கத்தில் இந்தியாவின் குரலை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இந்த மாநாடு அமையும் என்கின்றனர் துறை வல்லுநர்கள்.

சாதாரண மக்களின் வாழ்க்கையில்...
வெறும் பாதுகாப்பு விவாதங்களைக் கடந்து, AI தொழில்நுட்பம் எவ்வாறு சாதாரண மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு AI மூலம் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்தும், இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

பொறுப்பான AI பயன்பாடு
மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், கூகுள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் போன்ற தொழில்நுட்பத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். அதே வேளையில், இந்தியா தனது சுயசார்பு AI (Sovereign AI) திட்டங்களையும், நமது உள்ளூர் மொழிகளுக்கான பிரத்யேக AI மாதிரிகளையும் இந்த மேடையில் முன்னிலைப்படுத்த உள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பொறுப்பான AI பயன்பாட்டை உலக நாடுகளிடையே உறுதி செய்வதே இந்த உச்சிமாநாட்டின் இறுதி இலக்காகும்.

Related Link
நகைக்கடன் தள்ளுபடி - தமிழகத்திற்கே வந்தது தங்கமான அறிவிப்பு

நகைக்கடன் தள்ளுபடி - தமிழகத்திற்கே வந்தது தங்கமான அறிவிப்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 34 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved