news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news காதலால் 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
tv

Also Watch

tv

Read this

காதலால் 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சிவாஜி நகர், மும்பை

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீட்டில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு வந்த ஃபோன் கால். ஃபோன் பேசிக்கொண்டே பக்கத்தில் உள்ள கடைக்கு சென்ற இளம்பெண். இளம்பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட மற்றொரு இளம்பெண். கன்னத்தின் வழியாக பாய்ந்த குண்டு மண்டை ஓட்டிற்குள் சிக்கியதால் இளம்பெண் உயிரிழப்பு. கண்காணிப்பு கேமராவை வைத்து கொலையாளியை கைது செய்து விசாரித்த போலீஸ். இளம்பெண் கொலை செய்யப்பட்டது ஏன்? கொலை செய்யும் அளவுக்கு மற்றொரு இளம்பெண் மீது அப்படி என்ன கோபம்? நடந்தது என்ன?

டிவி பார்த்துக்கொண்டிருந்த இளம்பெண் ஷிப்பா
வீட்ல உட்காந்து டிவி பாத்துட்டு இருந்தாங்க இளம்பெண் ஷிப்பா. அப்ப ஷிப்பாவுக்கு ஃபோன் ஒன்னு வந்துருக்கு. அந்த ஃபோன அட்டெண்ட் பண்ண ஷிப்பா, ஃபோன் பேசுனபடியே பக்கத்துல உள்ள கடைக்கு போய்ருக்காங்க. அங்க ஷிப்பா கூட மற்றொரு இளம்பெண் பயங்கரமா சண்டை போட்ருக்காங்க. அந்த நேரத்துல திடீர்ன்னு மறைச்சு வச்சுருந்த துப்பாக்கிய எடுத்த இளம்பெண் ஷிப்பாவோட முகத்த குறிபார்த்து சுட்டுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. இதுல ஷிப்பாவோட கன்னத்து வழிய பாய்ஞ்ச துப்பாக்கி குண்டு மண்டை ஓட்டுக்குள்ள சிக்கிருக்கு. இதனால வழிதாங்க முடியாத ஷிப்பா சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்துட்டாங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச மக்கள் ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணி வரவச்சு ஷிப்பாவ மீட்டு பக்கத்துல உள்ள ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. அப்ப அவங்கள பரிசோதித்த டாக்டர் இளம்பெண் உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்ட போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க போலீஸ் அங்குள் சிசிடிவி காட்சிகள எடுத்து பார்த்துருக்காங்க. அதுல 25 வயது இளம்பெண் ஒருத்தங்க துப்பாக்கியால சுட்டுட்டு தப்பிச்சு போன காட்சிகள் பதிவாகியிருந்துச்சு. இதனால அந்த சிசிடிவி காட்சி மூலம் இளம்பெண்ணோட வீட்டுக்கு போன போலீஸ் அங்க பதுங்கியிருந்த தபசும்ம கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க.

தபசும் என்ற பெண்ணை காதலித்து வந்த நதீம்
மும்பை சிவாஜி நகர்ல உள்ள புர்கானியா பகுதிய சேந்த இளைஞர் நதீம், தபசும்-ங்குற 25 வயது பெண்ண உயிருக்கு உயிரா காதலிச்சு இருந்தாரு. ரெண்டு பேரும் பார்க், ஓட்டல்ன்னு ஜாலியா ஊர் சுத்திக்கிட்டு இருந்துருக்காங்க. இதுக்கிடையில அந்த இளைஞருக்கு இளம்பெண் ஷிப்பா கூட பழக ஆரம்பிச்சுருக்காரு. நதீம் ஒரே நேரத்துல ஷிப்பா கூடவும் தபசும் கூடவும் பேசிட்டு இருந்துருக்காரு.

ஷிப்பாவுக்கு மிரட்டல் விடுத்த இளம்பெண் தபசும்
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி தபசும் தனது ப்ரண்ஸோட வெளியில போய்ருந்தாங்க. அப்ப நதீமும், ஷிப்பாவும் அதே இடத்துல ஒன்னா ஊர் சுத்திட்டு இருந்துருக்காங்க. இதபாத்து கடும் கோபமான தபசும், இளைஞர் கிட்ட கடுமையா வாக்குவாதம் பண்ணிருக்காங்க. அடுத்து ஷிப்பாவோட வீட்டுக்கு போன தபசும், நானும் நதீமும் ரொம்ப வருஷமா காதலிச்சுட்டு இருக்கோம், நீ இனிமே அவன் கூட சுத்துற வேலை வச்சுக்காத, இதோட அவன மறந்துரு, அப்படி இல்லன்னா உன்னை உயிரோடையே விடமாட்டேன்னு மிரட்டிருக்காங்க. அதுக்கு ஷிப்பா, நதீம் என்னைய தான் உண்மையா காதலிக்குறான், அதனால எங்க ரெண்டு பேரோட லைப்ல இருந்து நீ விலகிருன்னு சொல்லிருக்காங்க. அப்ப தபசும், நீ நதீம்ம விட்டு விலகுலனா, உன்ன உயிரோடையே விட மாட்டேன்னு மிரட்டிருக்காங்க.

தபசும், அவரோட சகோதரர் உள்ளிட்ட 3 பேர் கைது
தபசுமோட மிரட்டல கேட்டு பயந்துபோன் ஷிப்பாவோட பெற்றோர் அவங்கள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வச்சுருக்காங்க. அங்க போனதுக்கு அப்புறமும் ரெண்டு பேரும் ஃபோன்ல பேசிட்டு இருந்ததா கூறப்படுது. இதனால கடும் கோபமான தபசும், ஷிப்பாவ கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. சில நாட்களுக்கு முன்னாடி ஷிப்பா சொந்த ஊருக்கு திரும்பிருக்காங்க. இத தெரிஞ்சுக்கிட்ட தபசும், தன்னோட சகோதரர் உதவியோட, அவங்க எங்கங்க தனியா போறாங்க, எப்பல்லாம் தனியா இருக்காங்கன்னு எல்லாத்தையும் நோட் பண்ணிருக்காங்க.

அதுபடி சம்பவத்தன்னைக்கு ஷிப்பாவுக்கு ஃபோன் பண்ணி தபசும், பக்கத்துல உள்ள கடைக்கு வரச் சொல்லிருக்காங்க. அதநம்பி ஷிப்பாவும் போக ரெண்டு பேருக்கு இடையில பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அப்ப திடீர்ன்னு மறைச்சு வச்சுருந்த துப்பாக்கிய எடுத்த இளம்பெண், ஷிப்பாவோட முகத்துலையே சுட்டு கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா சிசிடிவி காட்சி மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், தபசும், அவரோட சகோதரர், நதீம்ன்னு மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
தாய் இல்லாமல் பரிதவிக்கும் 2 குழந்தைகள்

தாய் இல்லாமல் பரிதவிக்கும் 2 குழந்தைகள்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமோனியா கசிவு உயிரிழப்பு எதிரொலி.. அடுத்த நொடி முதல்வர் போட்ட உத்தரவு

1
6 hrs 20 mins agoshare
Vijay orderbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved