news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பூ மற்றும் சாக்லெட்டுடன் வரவேற்ற ரோபோ
tv

Also Watch

tv

Read this

பூ மற்றும் சாக்லெட்டுடன் வரவேற்ற ரோபோ

2026 தேர்தல் திருவிழாவின் சுவாரசிய நிகழ்வுகள்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, பல்வேறு வாக்குச் சாவடிகளில் பாரம்பரிய உடையணிந்து வாக்காளர்களின் கைகளை குலுக்கி வரவேற்ற ரோபோ இயந்திரம் பூ மற்றும் சாக்லேட் கொடுத்தும் வரவேற்றது அனைவரையும் கவர்ந்தது. இந்த சுவாரசியத்திற்கு மத்தியில் திருமணம் முடிந்த கையுடன் மாலையும் கழுத்துமாக வந்து பல புதுமண தம்பதிகள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வாக்காளர்களின் கைகளை குலுக்கி உற்சாகம்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிக்கும்வகையில் ரோபோ இயந்திரம் மூலம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த ரோபோ வாக்காளர்களின் கைகளை குலுக்கி, வரவேற்று வாக்களிக்கும் அறைக்குள் அவர்கள் அனுப்பி வைத்தது அனைவரையும் கவரும்வகையில் இருந்தது.

பாவாடை தாவணி அணிந்து ரோபோ
குடியாத்தம் நகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பிங்க் வாக்குச்சாவடி மையத்திலும் வாக்காளர்களிடம் தமிழில் பேசி அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து பெண் ரோபோ வரவேற்றது. பாரம்பரிய உடையான பாவாடை தாவணி அணிந்து ரோபோ பெண் வாக்காளர்களை வரவேற்றதை பலரும் வியப்புடன் பார்த்தனர்.

வாக்காளர்களை வாழ்த்தி வரவேற்ற நிலா
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியிலும் நிலா என்ற ரோபோ வாக்காளர்களை வாழ்த்தி வரவேற்றது. தனது பெயர் நிலா எனக்கூறிய அந்த ரோபோ அனைவரும் ஜனநாயக கடைமையாற்ற வேண்டும் எனக்கூறியதோடு ஜனநாயக கடமை ஆற்றியவர்களுக்கு நன்றியும் தெரிவித்தது.

பூக்கள் மற்றும் சாக்லேட்
சேலம் நெத்திமேடு வாக்குப்பதிவு மையத்திலும் ரோபோ மூலம் வாக்காளர்கள் வரவேற்கப்பட்டது அனைவரையும் கவர்ந்தது. பெண்கள் போன்று ஆடை அணிந்திருந்த அந்த ரோபோ வாக்காளர்களை பூக்கள் மற்றும் சாக்லேட் கொடுத்து வரவேற்றது.

மாலையும், கழுத்துமாக வந்து வாக்களிப்பு
இதுஒருபுறமிருக்க, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னக்கடை பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் இரண்டு புதுமண தம்பதியர் மாலையும் கழுத்துமாக ஜோடியாக வந்து வாக்களித்தனர். அதேபோல், நாமக்கல்லை சேர்ந்த புது மணப்பெண் தீபிகா திருமணம் முடிந்த கையுடன் கழுத்தில் மாலையணிந்தபடி N.கொசவம்பட்டி மாநகராட்சி துவக்கப் பள்ளிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

தேர்தல் அலுவலர்கள் வாழ்த்து
காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோயில் தெரு பகுதியை சேர்ந்த மணமகன் ரவி ராகுல் என்பவர் மாலையும் கழுத்துமாக வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்கு செலுத்த வந்த மணமக்களுக்கு வாக்கு சாவடியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதி திலிப்குமார், சினேகபிரியா இருவரும் திருமண கோலத்தில் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

புதுமண தம்பதி வாக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பில் திருமணம் முடிந்த கையுடன் புதுமண தம்பதிகள் ஜனநாயக கடமையாற்றினர். மணமகன் ஜெகன் தேரிக்குடியிருப்பிலும், மணமகள் பிரியா மெஞ்ஞானபுரத்திலும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

“வாக்களித்தேன் பெருமிதம் கொண்டேன்”
சென்னை மேடவாக்கத்திலும் திருமணம் ஆன கையுடன் வீட்டுக்குக்கூட செல்லாமல் புதுமண தம்பதி சுரேஷ், சரண்யா இருவரும் ஜோடியாக வந்து தங்கள் ஜனநாயக கடையை ஆற்றி உள்ளனர். ஜோடியாக “வாக்களித்தேன் பெருமிதம் கொண்டேன்” என்ற விளம்பர பதாகையுடன் நின்று புதுமண தம்பதி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

ஜனநாயக கடமையாற்றிய மணமகன்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரியன்வாயல் வாக்குச்சாவடியிலும் மணமகன் சுபாஷ் மறுவீட்டுக்கு செல்லாமல் தனது வாக்கினை பதிவு செய்த நிலையில் அவரது மனைவியை கொருக்குப்பேட்டைக்கு அழைத்து சென்று ஜனநாயக கடமை ஆற்ற வைத்தார். அதேபோல் மீஞ்சூரை சேர்ந்த மணமகள் விஷால் நெய்தவாயல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மணப்பெண்ணுடன் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

ஜனநாயக கடமையாற்றிய ஜோடி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாவிளை பகுதியை சேர்ந்த புதுப்பெண் அபிஷா திருமணம் முடிந்த கையோடு கணவர் விஜய்யுடன் சென்று திருமண கோலத்தில் மண்டைக்காடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த கோகுல்-மதுமிதா தம்பதி மாலையும் கழுத்துமாக சென்று ஜனநாயக கடமையாற்றினர். அப்போது வாக்குப்பதிவு மையத்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்கள் ஆகியோர் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பைத்தியநாத சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்ட மணமகன் இசக்கிராஜ் தனது வாக்கை பதிவு செய்தார்.



மணமகனுக்கு பலரும் வாழ்த்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பார்க் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் மணக் கோலத்தில் வந்து புதுமணப்பெண் சுதர்சனா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். திருவள்ளூரில் காதல் திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர். மணமகள் வாணி பட்டறை பகுதியில் உள்ள அரசு பள்ளியிலும், மணமகன் ரூபேஷ் வேப்பம்பட்டில் உள்ள வாக்குச்சாவடியிலும் தனது வாக்கை பதிவு செய்தனர்.

மணக்கோலத்திலேயே வாக்குப்பதிவு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த தனசேகர்-ப்ரீத்தி இருவரும் மணக்கோலத்திலேயே வந்து ஜனநாயகக் கடமையாற்றி உள்ளனர்.. அவர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி காயத்ரி-பரத்குமார் இருவரும் திருமணம் முடிந்த கையுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர்.

Related Link
ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்

ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெங்களூரை சேர்ந்த பக்தர் 7 தங்க ஆபரணங்களை வழங்கினார்

1
1 hr 2 mins agoshare
திருப்பதி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved