Also Watch
Read this
By: Web Team

ஆசிரியர் மீது ஆசிட் வீசிய நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள நகாசா பகுதியில், ஆசிரியை ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் அவரை பின் தொடர்ந்து சென்ற ஒருவர் ஆசிரியை முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு பைக்கில் தப்பி ஓடியுள்ளார்.
ஆசிட் பட்டதால் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் படுகாயமடைந்த ஆசிரியை கதறி துடித்துள்ளார். தகவலறிந்து விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியை மீது ஆசிட் வீசிய நிசு திவாரி என்பவரை பிடிக்க சென்றனர். அப்போது நிசு திவாரி தப்பி ஓடியதால் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காலில் குண்டு பாய்ந்த நிசு திவாரிக்கும், அவர் ஆசிட் வீசிய ஆசிரியைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணையில் கடந்த சில நாட்களாக, ஆசிரியையை பின் தொடர்ந்த நிசு திவாரி, அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது ஆசிட் வீசியதாகவும் சொல்லப்படுகிறது.