Also Watch
Read this
By: Web Team

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அவருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
டாம் குரூசுடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ், டோலி பார்டன் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவர்னர்ஸ் விருது என்று அழைக்கப்பட்டும் இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
டாம் குரூசின் 35 ஆண்டு கால திரை வாழ்க்கையில் அவருக்கு முதல் முறையாக ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : குபேரா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது... தனுஷ் நடித்துள்ள படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்