Also Watch
Read this
By: Web Team

வானில் பறந்த விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்தபடி, சிறுவன் ஒருவன் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து, டெல்லிக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த போது, விமானத்துக்கு அருகே சிறுவன் இருந்தது தெரிய வந்தது. திடீரென விமானத்தின் அருகே சிறுவன் இருந்ததை பார்த்த பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தான், அந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. காபூல் விமான நிலையத்துக்குள் நுழைந்த சிறுவன், விமானத்தில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டு, விமானத்தின் நடுப்பகுதியில் உள்ள சக்கரத்தில் அமர்ந்து ஒளிந்து கொண்டதாக கூறியுள்ளான். சிறுவன் சொன்னதை கேட்டு திடுக்கிட்ட பாதுகாப்பு படையினர் விமானத்தில் ஏதாவது அசம்பாவித செயல் இருக்கிறதா என சோதனையிட்டனர். அதில் விமானத்தில் எந்தவித சதி செயலும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, டெல்லி வந்த சிறுவனை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.