news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் ஒரே நாளில் 2 முறை, ரூ.85,000ஐ தாண்டியது
tv

Also Watch

tv

Read this

மீண்டும் ஒரே நாளில் 2 முறை, ரூ.85,000ஐ தாண்டியது

22 காரட் ஆபரண தங்கம் அதிரடி உயர்வு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

மீண்டும் ஒரே நாளில், இரண்டு முறை ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து, வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் 84 ஆயிரம் ரூபாயை கடந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் கிராமுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனையாகிறது.

கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1680 அதிகரித்து, பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கத்தின் விலை 2 முறை அதிகரித்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.84 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.


பிற்பகல் நிலவரப்படி, மீண்டும் ஒரு சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை ஆனது. 
காலையில் ஒரு கிராமுக்கு ரூ.70 அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.140 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,640க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்திருந்தது. இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது.

இதனால், முதல் முறையாக வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 85 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதையும் பாருங்கள்; GOLD PRICE HIKE ..வெளியான திடுக்கிடும் தகவல் | Today Gold Rate Update | Gold Price | Gold

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து இப்படியா?

4
35 mins agoshare
jewel theft








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau