news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தடைகளை உடைத்து ஜனநாயகன் ரிலீஸ், அமைச்சர்கள் ஆனந்த கண்ணீர்
tv

Also Watch

tv

Read this

தடைகளை உடைத்து ஜனநாயகன் ரிலீஸ், அமைச்சர்கள் ஆனந்த கண்ணீர்

இதுதான் கடைசிப்படம் என்ற வருத்தமாம்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பல தடைகளை தாண்டி, முதலமைச்சர் விஜய் நடித்த கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீசாகி உள்ள நிலையில், ரசிகர்களுக்கு போட்டியாக ஆளுங்கட்சி அமைச்சர்களும் ஆனந்த கண்ணீர் வடித்து, தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கை கொட்டி உள்ளனர். படத்தை பார்த்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச வார்த்தையின்றி கண் கலங்கிய நிலையில் அமைச்சர் முகமது பர்வேஸ் தேம்பி தேம்பி அழுது தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

ஜனநாயகன் ரிலீஸ்...
நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் தான். ஆனாலும், அதற்கு முன்பே முதலமைச்சர் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் அல்லவா? என்பதை தான் தவெக அமைச்சர்களின் கண்களில் நிரம்பி, கன்னத்தில் வழியும் கண்ணீரும், உணர்ச்சிப் பெருக்கும் உணர வைக்கிறது.
முதலமைச்சர் விஜய் நடித்த கடைசிப்படமான ஜனநாயகன் பொங்கல் விருந்தாக, ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய நிலையில் தணிக்கை சான்றிதழ், நீதிமன்றத்தில் வழக்கு, மறு தணிக்கை, சோஷியல் மீடியா லீக் என பல தடைகள் குறுக்கே வந்து குடைச்சல் கொடுத்தன. எப்படியோ ஒரு வழியாக 6 மாத காலத்திற்கு பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது பல மாநிலங்களில் ஜனநாயகன் வெளியாகி உள்ளது.

பெருந்திருவிழா...
இந்நிலையில் ரசிகர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும், குரல் உடைய கத்தியும் தியேட்டர்களையே ஸ்தம்பிக்க வைத்தனர். இந்த பெருந்திருவிழா கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கே டஃப் கொடுத்தனர் தவெக அமைச்சர்கள். அது சரி, அவர்களும் முதலமைச்சரின் ரசிகராக இருந்து தானே அரசியலுக்கு வந்துள்ளனர். அப்படியானால் அவர்களுக்கும் அந்த வைப் இல்லாவிட்டால் தானே ஆச்சரியம். அதிலும், திரைப்படத்தின் தொடக்கத்தில் தளபதி விஜய் என்பதற்கு பதிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்றும் சட்டப்பேரவையில் அவர் காட்டிய சைகையும் டைட்டில் கார்டாக இடம்பெற்றிருந்தால் வைப் இருக்கத்தானே செய்யும்?

கண் கலங்கிய அமைச்சர்
அதே வைபோடு, சென்னை ரோகிணி திரையரங்கில் ஜனநாயகனை காண வந்தனர் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அருண்ராஜ். திரை வாழ்க்கையை கைவிட்டு, அரசியல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்த உன்னத தலைவரின் நடிப்பைக் காண வந்ததாக அருண்ராஜ் புகழாரம் சூட்ட, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச வார்த்தைகளின்றி கண் கலங்கினார். இதுதான் முதலமைச்சர் நடிப்பில் உருவாகி உள்ள கடைசிப்படம், இது ரிலீஸ் ஆக எவ்வளவு பெரிய போராட்டமே நடந்தது? என்பதுபோல இருந்தது அந்த கண்ணீரின் மௌன பாஷை.

தேம்பி தேம்பி அழுகை
அதேபோல், புதுக்கோட்டையில் உள்ள விஜய் தியேட்டருக்கு வந்த அமைச்சர் முகமது பர்வேஸ், திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பாக முதலமைச்சர் விஜய் குறித்த ப்ரமோஷன் வீடியோவை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு குலுங்கி குலுங்கி அழுதார். இதேபோல், கோவை காந்திபுரம் பகுதியில் ஜனநாயகன் படத்தை பார்த்த அமைச்சர் சம்பத் குமார் திரைப்படத்தின் இறுதியில் கண் கலங்கினார்.

வாழ்க கோஷமிட்ட அமைச்சர்
இது ஒருபுறமிருக்க, தூத்துக்குடியில் உள்ள கிளியோபட்ரா திரையரங்கில் ஜனநாயகனை காண வந்த அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கழுத்தில் மாலையணிந்தபடி கேக் வெட்டி, தியேட்டருக்குள் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத் முதலமைச்சர் விஜய் வாழ்க என உற்சாக மிகுதியில் கோஷம் எழுப்பினார்.

ராட்சத மாலை உடன்...
இதனிடையே, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் ஜனநாயகன் திரைப்படத்தை காண வந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு ராட்சத இயந்திரத்தின் மூலம் 20 அடி மாலையை அணிவித்த ரசிகர்கள் திறந்த காரில் அழைத்து சென்றும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன்பிறகு அமைச்சர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்
அதேபோல், கும்பகோணம் கார்த்திக் சினிமாஸ் லோட்டஸ் திரையரங்கிற்கு படத்தை பார்க்க வந்த அமைச்சர் வினோத் பிரம்மாண்ட கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கடலூர் ஏஜிஎஸ் திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகராக நின்று படத்தை பார்த்த அமைச்சர் ராஜ்குமார் இதுதான் முதலமைச்சரின் கடைசிப்படம் எனவும் மனம் வருந்தினார்.


சிகர்களுடன் ரசிகராக...
ஈரோடு ஆனூரில் உள்ள தியேட்டரில் தனது மனைவியுடன் ஜனநாயகன் படத்தை பார்த்து அமைச்சர் விஜய் பாலாஜி பரவசமடைந்த நிலையில் சிவகிரியில் உள்ள தியேட்டரில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் குத்தாட்டம் போட்டு ஜனநாயகனை கொண்டாடி மகிழ்ந்தார்.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ரசிகர்களின் விசில் சத்தத்திற்கு மத்தியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி படம் பார்த்த நிலையில் காரைக்குடியில் அமைச்சர் டி.கே.பிரபு ரசிகர்கள் வெள்ளத்திலேயே சென்று படம் பார்த்தார்.

தேம்பி தேம்பி அழுத மா.செ.,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அமைச்சர் காந்திராஜ் ஜனநாயகனை ரசிகர்களுடன் சேர்ந்து உற்சாகமாக பார்த்த நிலையில் உதகை கணபதி திரையரங்கில் அமைச்சர் மதன் ராஜா கேக் வெட்டியும், ஸ்கிரீனில் மலர்களை தூவியும் படத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
இப்படி அமைச்சர்கள் அழுதபடியும், ரசிகர்களுடன் நடனமாடியும் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்திய நிலையில் கரூர் மேற்கு மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் மதியழகனும் தேம்பி தேம்பி அழுது தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்.

தையல்மிஷன், பிரியாணி...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியில் அமைந்துள்ள ராக்கி திரையரங்கில் தமிழக முதலமைச்சர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியானது.

ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடும் வகையில்  விஜய் ரசிகர்கள் திரையரங்கு முன்பு பேனர்கள் வைத்து பட்டாசு வெடித்து  குத்தாட்டம் போட்டு கொண்டாடினர். அதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷன் வழங்கினர்.

பின்னர் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கி தவெக நிர்வாகிகள் கொண்டாடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதல்வர் சிக்க கூடாது என ஸ்டாலின் எச்சரிக்கை

15
11 mins agoshare
ஸ்டாலின் எச்சரிக்கைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau