news-tamil-logo

3/15/2026, 11:10:43 AM

news-tamil-logo
more
Home news ''த்ரிஷா கிட்ட இருந்து வெளிய வாங்க''
tv

Also Watch

tv

Read this

''த்ரிஷா கிட்ட இருந்து வெளிய வாங்க''

ஈரம் காயும் முன் வார்த்தை விட்டாரா?

Posted on: Feb 16, 2026 07:53 AM

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

த.வெ.க. தலைவர் விஜய் உடன், நடிகை திரிஷாவை சேர்த்து வைத்து அநாகரீகமாக, கீழ்த்தரமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கண்டனம் வலுத்து வருகிறது. NDA கூட்டணியில் சேர விஜய்க்கு அழைப்பு விடுத்து தமிழிசை பேசிய ஈரம் காயும் முன்பு, விஜய் மீது தனிப்பட்ட முறையில் தரக்குறைவான விமர்சனத்தை முன்வைத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் நிலைக்கு நயினார் நாகேந்திரன் ஆளாகியுள்ளார்.

வெளியே வர வேண்டும்
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், கொஞ்சம் கூட வரைமுறையே இல்லாமல் மற்றொரு கட்சி தலைவரை பார்த்து தனிப்பட்ட முறையில் பேசியதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது தான். சேலத்தில், த.வெ.க. தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய்க்கு எதுவுமே தெரியாது என ஆரம்பித்த நயினார், முதலில் விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும் என கீழ்த்தரமாக பேசினார்.

மாநில தலைவரின் பதவிக்கு அழகா?
சேலம் சந்திப்பில், திமுகவை தான் அதிகளவில் விஜய் தாக்கி பேசினார். மக்களே டெலீட் செய்தவர்களை பற்றி எதற்காக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என பாஜகவை ஒரே ஒரு இடத்தில் மட்டுமே விமர்சித்தார். அப்படி இருக்கையில், சம்பந்தமே இல்லாமல் பாஜகவின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், விஜய்யை தனிப்பட்ட முறையில் காட்டமாக பேசியது, சர்ச்சையை மட்டுமல்லாமல் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. தேசிய கட்சியான பாஜகவின், மாநில தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டு என்னமோ சமூக வலைதளத்தில் FAKE ID-யில் பேசும் நபர்கள் போல, மற்றொரு கட்சி தலைவரை தனிப்பட்ட ரீதியில் நடிகையுடன் சேர்த்து வைத்து விமர்சித்தது நயினாரை நோக்கி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, நமீதா, குஷ்பூ, கஸ்தூரி என நடிகைகள் பட்டாளத்தை பாஜகவில் சேர்த்து வைத்துக் கொண்டு, இன்னொரு நடிகை குறித்து இழிவாக கருத்து கூறுவது தான் மாநில தலைவரின் பதவிக்கு அழகா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

நாலா பக்கத்தில் இருந்தும் கண்டனம்
இது ஒரு பக்கம் இருக்க, NDA கூட்டணியில் விஜய் சேர வேண்டும் என இரு நாட்களுக்கு முன்புதான் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்தார். அண்ணாவும் - ராஜாஜியும் கூட்டணி அமைத்த நிகழ்வை சுட்டிக்காட்டி தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்த நிலையில், அதற்குள்ளாக விஜய் மீது நாலாந்தர விமர்சனத்தை முன் வைத்த நயினாருக்கு நாலா பக்கத்தில் இருந்தும் கண்டனம் குவிந்து வருகிறது. அரசியலில் கொள்கை ரீதியான விமர்சனங்களை தாண்டி, தனிப்பட்ட நபர்களை, குறிப்பாக பெண்களை மையப்படுத்தி பேசுவது துரதிர்ஷ்டவசமானதாக பார்க்கப்படுகிறது. திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என அறிவித்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் மீது பெரும்பாலும் அவர் சார்ந்த திரைத் துறையை வைத்தே விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

வாய்க்கு வந்ததை உளறி தள்ளுவது
நயினாரின் விமர்சனத்திற்கு திமுகவினர் ஒட்டு மொத்தமாக பொங்கி எழுந்து கண்டனம் தெரிவித்தாலும், திமுகவில் இருக்கும் சில மேடை பேச்சாளர்களே இதே தொனியில் தான் விஜய்யை விமர்சித்திருக்கிறார்கள். குறிப்பாக, திரைத் துறையை சேர்ந்தவர்கள் என்றால் இழிவான பார்வையிலேயே நடத்தும் போக்கின் தொடர்ச்சியில் தான் இத்தகையை விமர்சனங்களும் எழுந்து வருவதாக பார்க்கப்படுகிறது. விஜய் மீது அரசியல் ரீதியாக விமர்சனம் வைக்காமல் பொது வெளியில் இயங்கும் பெண்ணை சேர்த்து வைத்து பேசியிருப்பது நயினார் நாகேந்திரனின் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்து பாஜகவில் ஐக்கியமான நயினார் நாகேந்திரன், சில நாட்களுக்கு முன்பு கூட கரூர் விவகாரம் குறித்து சர்ச்சையாக பேசினார். தடாலடியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததை உளறி தள்ளுவது நயினார் நாகேந்திரனுக்கு தான் சிக்கலை உருவாக்கும் என்பதை அவர் உணர்ந்து கொண்டால் நல்லது.

Related Link
தேன் கூட்டில் கல் எறிந்த பிரவீன் சக்கரவர்த்தி

தேன் கூட்டில் கல் எறிந்த பிரவீன் சக்கரவர்த்தி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

0
0 min agoshare
Election newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved