Also Watch
Read this
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்று, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது
தென் மேற்கு பருவமழை எப்போது?
இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் கூறி இருப்பதாவது;
தென்மேற்கு பருவமழை கேரளப் பகுதிகளில் ஜூன் 4ஆம் தேதி வாக்கில் துவங்க வாய்ப்புள்ளது.சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை விதர்பா, தெலங்கானா மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதி
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன்-5
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி
கோயம்புத்தூர்
திருப்பூர்
தேனி
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
திண்டுக்கல்
தூத்துக்குடி
விருதுநகர்
ஈரோடு
சேலம்
நாமக்கல்
திருச்சிராப்பள்ளி
அரியலூர்
பெரம்பலூர்
கள்ளக்குறிச்சி
கரூர்
சிவகங்கை
மதுரை
மயிலாடுதுறை
காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஜூன்-6
நீலகிரி
கோயம்புத்தூர்
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
தூத்துக்குடி
ராமநாதபுரம்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஜூன்-7
ஈரோடு
சேலம்
நாமக்கல்
விருதுநகர்
நீலகிரி
கோயம்புத்தூர்
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved