Also Watch
Read this
By: Web Team

சொன்னதையும் செய்திருக்கிறோம், சொல்லாததையும் செய்திருக்கிறோம் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில் கூறி இருப்பதாவது;
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் விளக்கி உள்ளனர்.
இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல்வரின் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்படாதவை.
முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பாஜக வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்.
Accessibility
Accountability
Transparency
Inclusivity
Responsibility
Sustainability
இதுதான் திமுக
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved