news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
tv

Also Watch

tv

Read this

முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

பரஸ்பரம் சால்வை அணிவித்து...

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை த.வெ.க தலைவரும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய் சந்தித்தார். சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

தவெக அபார வெற்றி
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில், போட்டியிட்டு 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கி, த.வெ.க உடன், காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது.

தொடர்ந்து வந்த ஆதரவு
நீடித்த இழுபறிக்குப் பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்கள், மார்க்சிஸ்ட் 2 இடங்கள், ஐ.யூ.எம்.எல் 2 இடங்கள், வி.சி.க 2 இடங்கள் கொடுத்த ஆதரவின் மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது, 'சி. ஜோசப் விஜய் எனும் நான்' என த.வெ.க சொன்னபோது அரங்கில் எழுந்த சத்தம் விண்ணைக் கிழித்தது. தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

முதல் கையெழுத்து
அதே மேடையில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு, விஜய் முதல் கையெழுத்து போட்டார். 2வது கையெழுத்து பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும் "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" திட்டத்துக்கு கையெழுத்து போட்டார். போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டத்துக்கு 3ஆவது கையெழுத்திட்டார் விஜய்.

திமுக தலைவர் உடன் சந்திப்பு
இந்த நிலையில், தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை த.வெ.க தலைவரும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சருமான விஜய் நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.


Related Link
முதலமைச்சரானார் ஜோசப் விஜய் உணர்ச்சி பெருக்குடன் பதவியேற்பு

முதலமைச்சரானார் ஜோசப் விஜய் உணர்ச்சி பெருக்குடன் பதவியேற்பு

             



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாடு சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்வு

3
3 mins agoshare
தமிழ்நாடு சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்வுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved