Also Watch
Read this
முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது என விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களே பாடம் புகட்டுவார்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.

தக் லைஃப் ஸ்டாரி
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், "தக் லைஃப்" ஸ்டோரி போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.

எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது
இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது. அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்.

“டேக் டைவர்ஷன், டேக் டைவர்ஷன்” என்று ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.