news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்"
tv

Also Watch

"தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்"

பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்தது CJP

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிராகரித்தது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியே தீர வேண்டும் என திட்டவட்டமாக கூறி உள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்து உள்ளார். 26ஆவது நாளாக உண்ணா நோன்பிருக்கும் சோனம் வான்சுக், உடனடியாக போராட்டத்தை முடித்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்தார்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
மாணவர்கள் போராட்டம் காரணமாக, 2ஆவது நாளாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை 16 மெட்ரோ ரயில் நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் உள்ள முக்கிய இடங்களுக்கு அருகே உள்ள லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி வீடு, மத்திய செயலகம், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தம், கான் சந்தை, ஜோர் பாக், சிவாஜி அரங்கம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்களை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.

துணை ராணுவ படை குவிப்பு
டெல்லி​யில் துணை ராணுவ படை வீரர்​கள் குவிக்​கப்​பட்​டு உள்​ளனர். இந்த பதற்​ற​மான சூழ்​நிலை​யில், சிஆர்​பிஎப்-ஐ சேர்ந்த 20 கம்​பெனி துணை ராணுவ ​படையினர் கொல்​கத்​தா​வில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்​தடைந்​தனர். டெல்​லி​யின் ஜந்​தர் மந்​தர் உள்​ளிட்ட முக்​கிய இடங்​களில் துணை ராணுவப் படை​யினர் குவிக்​கப்​பட்​டு உள்​ளனர்.

தொடரும் பதற்றம்
நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சியினர், கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்​தைத் தொடங்​கினர். கடந்த 20ஆம் தேதி நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி சென்​றனர். அப்​போது, போராட்​டக்​காரர்​கள் - காவல்துறை இடையே தள்​ளுமுள்ளு ஏற்​பட்​டது. தடியடி நடத்​தி​யும், கண்​ணீர் புகை குண்​டு வீசி​யும் கூட்​டத்​தைக் காவலர்கள் கலைத்​தனர். போராட்டக்காரர்களும் காவல்துறை, துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். காவல் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.

கோரிக்கைகள் என்னென்ன?
* நீட் வினாத் தாள் கசிவு விவ​காரத்​தில் அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும்.
* போராட்​டத்​தில் பங்​கேற்ற மாணவர்​கள் மீது எப்​ஐஆர் பதிவு உட்பட எந்த சட்​டரீ​தி​யான நடவடிக்​கை​யும் எடுக்க கூடாது.
* நீட் வினாத் தாள் கசி​வால் பாதிக்​கப்​பட்டு உயி​ரிழந்த மாணவர்​களின் குடும்​பங்​களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்​டும்.
* சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டத்தை முடிவுக்​குக் கொண்டு வர மத்​திய அரசு அவரிடம் பேச வேண்​டும் என்று சிஜேபி கட்​சி​யினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இணையதள சேவை...
பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய டெல்லி பகுதியில் மட்டும் இணையதள சேவை நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற சாலை, ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி அருகில் உள்ள பகுதிகளில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது.

Related Link
மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தல்

மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved