news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தல்
tv

Also Watch

மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தல்

"இளைஞர்கள் எதிர்காலத்தை அழித்தவர் நீங்கள் தான்"

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்க விடமாட்டேன் எனக்கூறும் பிரதமர் மோடி தான், அவர்களது எதிர்காலத்தை அழித்ததாக ராகுல்காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கல்வி அமைப்பை அழிக்க துணிந்தவர்களை ஊக்குவித்ததற்காக, பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில்...

இதுகுறித்து, ராகுல்காந்தி கூறியதாவது;
நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரம் குறித்து, அமை​தி​யான வழி​யில் மாணவர்கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். ஆனால், அவர்​கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் கல்வி முறை சீரழிந்து விட்​டது. பல்​வேறு தேர்​வு​களில் 152 முறை வினாத்​தாள் கசிந்​துள்​ளன. இதில், தொடர்புடைய குற்​ற​வாளி​கள் யாரும் இது​வரை கைது செய்யப்பட​வில்​லை, தண்​டிக்​கப்​பட​வும் இல்​லை. தேர்​வு​களில் நடை​பெறும் மோசடிகளால், இளைஞர்​கள் எதிர்காலத்​தை தொலைக்​கின்​றனர். நீட் தேர்வு காரண​மாக, ஓராண்​டுக்கு 1.32 லட்​சம் கோடி ரூபாய் புழங்​கு​கிறது. வினாத்​தாள் கசிவு காரண​மாக, மறு தேர்வு எழுதும் மாணவர்​கள் மன அழுத்​தத்​துக்கு ஆளாகின்​றனர்.

மாணவர்களின் கோரிக்கைகள்
மாணவர்​களின் முக்​கிய 3 கோரிக்​கைகளை ஏற்​றால், போராட்​டம் முடிவுக்கு வரும். மத்​திய கல்வி அமைச்​ச​ராக தோல்வி அடைந்​தவரும், ஊழல்​வாதி என அறியப்​பட்​ட​வரு​மான தர்​மேந்​திர பிர​தானை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும். மாணவர்​கள் மீது கை நீட்​டிய ஒவ்​வொரு காவலரும் பொறுப்​பேற்க வேண்​டும். இதற்​கெல்​லாம் பொறுப்​பேற்க வேண்​டிய​ பிரதமர் மோடி, மாணவர்​களிடம் மன்​னிப்​பு கேட்க வேண்​டும். இந்​த கோரிக்​கைகளை நாங்​கள் முழு​மை​யாக ஆதரிக்​கிறோம்.

கல்விமுறையை மாற்ற வேண்டும்
நமது நாட்​டின் மிகப்​பெரிய சொத்து என்று நினைக்​கப்​படும் கல்வி முறை​யானது, தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசின் காலத்தில் முற்​றி​லும் சிதைந்​து ​விட்​டது. ஏழைகளுக்​கும், நடுத்தர வகுப்பு மக்​களுக்​கும் ஏற்ற வகை​யில் நமது கல்வி முறையை மாற்ற வேண்​டும். மாணவர்​கள் மீது காவலர்கள் தடியடி நடத்​திய சம்​பவத்திற்கு, பிரதமர்​ மோடி மன்​னிப்​பு கோர ​வேண்​டும்​.
இவ்​வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved