Also Watch
Read this
சிறந்த அதிகாரிகளை நியமித்துவிட்டேன், சிங்கப்பெண் படையை அமைத்து விட்டேன் என சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோரின் அழுகுரல் கேட்கவில்லையா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். சவாலும், சவடாலும் விட்டவர், எப்போது silent modeல் இருந்து வெளியே வருவார்? என்றும் சரமாரி வினா எழுப்பி உள்ளார்.

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், ஆறு மாதங்களுக்கு எதுவும் கேட்கக் கூடாது என்று முதல்வர் நினைக்கிறாரா? என கேட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? என்றும் வினவி, எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

'கால்ஷீட்' எப்போது?
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
"Efficient ஆன அதிகாரிகளை நியமித்து விட்டேன், சிங்கப்பெண் படையை அமைத்து விட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோரின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?

போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றி குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent modeஇல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved