Also Watch
Read this

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஓவரில் இந்தியா "ஏ" அணியை வீழ்த்தி, இலங்கை "ஏ" அணி வெற்றி பெற்றது.

இலங்கை 16 ரன், இந்தியா 9 ரன்
முதலில் விளையாடிய இந்திய அணி, 49.2 ஓவரில் 265 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் 66 பந்துகளில் 72 ரன்களும், விப்ராஜ் நிகம் 49 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதனால், ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் இலங்கை அணி 16 ரன்கள் எடுக்க, இந்தியா 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைபவ் சூர்யவன்ஷி
இலங்கை தம்புள்ளாவில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையேயான டி 20 முத்தரப்பு போட்டியில், தோல்விக்குப் பிறகு இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இலங்கை வீரர்களுடன் வாக்குவாதம்
சூப்பர் ஓவரில் இலங்கை 16 ரன் எடுக்க, அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோரால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, களத்தில் இருந்த இலங்கை வீரர்கள் வெற்றி மகிழ்ச்சியையும், சில வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர் ஒருவரை ஆக்ரோஷமாக தள்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved