news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க வேண்டும்? - இபிஎஸ் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க வேண்டும்? - இபிஎஸ் கண்டனம்

எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் கொலையை குறிப்பிட்டு தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை? என்று, இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் தவெக அரசின் 6 மாத Trial Period முடியும் வரை உயிரை இழக்க வேண்டும்? என்றும் சாடி உள்ளார்.

என்ன தான் செய்கிறது காவல்துறை?
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி தருகிறது. தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?

இதுதான் அந்த மாற்றமா?
இதுபோல், இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்? “அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமேல் எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே, இதுதான் அந்த மாற்றமா?

அரசை வலியுறுத்துகிறேன்
குழந்தை பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்தி விட்டு, Seriousness புரிந்து சட்டம் - ஒழுங்கை காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Related Link
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு என எதிர்க்கட்சிதலைவர் உதயநிதி கண்டனம்

வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு என எதிர்க்கட்சிதலைவர் உதயநிதி கண்டனம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவல்துறையின் தோல்வியே காரணம் - அன்புமணி

4
55 mins agoshare
காவல்துறையின் தோல்வியே காரணம் - அன்புமணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved