Also Watch
Read this
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

குழந்தைக்கு கொடுமை, அதிர்ச்சி
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில், அந்த குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனையை காவல்துறை பெற்றுத் தர வேண்டும்.

தினசரி தொடர்கதை
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த ஷோபா மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக வாக்கு கேட்பதற்கான டூஸ்ஸ் ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.

வெண்டிலேட்டரில் சட்டம்-ஒழுங்கு
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது, சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில், சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை என தமிழ்நாடு முழுக்க சட்டம் - ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.

வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது
ஆட்சி அமைத்து, ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை. அடுத்த கட்சி ஆட்களை பர்ச்சேஸ் செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் - ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும். தமிழ்நாட்டில், சீரழியும் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல, மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும். இனியும், இதுமாதிரியான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், தலைவரின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved