news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மக்கள் திண்டாட்டம், அரசு கொண்டாட்டம் என இபிஎஸ் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

மக்கள் திண்டாட்டம், அரசு கொண்டாட்டம் என இபிஎஸ் கண்டனம்

ஜனநாயகன் முதல் காட்சியை பார்த்து...

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரசு மருத்துவமனையில் எலி கடித்து கால் விரல் இழந்த பெண்ணிற்கு தவெக அரசு என்ன பதில் வைத்துள்ளது? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார். மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஜனநாயகன் படத்தின் முதல் காட்சியை பார்த்து கொண்டாட்டத்தில் திளைத்து கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

என்ன பதில்...?
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது;
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?

அனைவரும் லீவு
இப்படி பொது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, துறையின் அமைச்சரோ, ’ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சி பார்த்துக் கொண்டாடி செல்ஃபி பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன.

கடும் கண்டனம்...
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய நீரோ அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Related Link

"திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் ஆட்சியின் பதில் என்ன?"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

4
24 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau