news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news H-1B விசா அறிவிப்பு, யாருக்கெல்லாம் பொருந்தும்?
tv

Also Watch

tv

Read this

H-1B விசா அறிவிப்பு, யாருக்கெல்லாம் பொருந்தும்?

முற்றுப்புள்ளி வைத்த அமெரிக்கா

77

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
h1b visa

இனிமேல், H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க, இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் கட்டணம் என்று, கடந்த 19ஆம் தேதி அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

H-1B விசா என்றால் என்ன?
புலம் பெயர்ந்தோர் அல்லாத விசா அதாவது Non-immigrant visa. இந்த விசா அமெரிக்காவில் சிறப்பு தொழிலில், தொழிலாளர்களை தற்காலிகமாக நியமிக்க உதவுகிறது. இந்த விசா வாங்குவது, ஒரு குறிப்பிட்ட துறை, Bachelor's degree அல்லது சமமான கல்வித்தகுதி தேவை.
இந்த விசா தொடர்பான அமெரிக்காவின் அறிவிப்பு தான் ஒட்டுமொத்த டெக் துறையையும் தலைகீழாக புரட்டிப் போட்டது. மெட்டா, மைக்ரோசாஃப்ட் என்று பல டெக் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்கள், 24 மணி நேரத்தில் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்றும், அடுத்த 14 நாட்களுக்கு யாரும் தங்களின் சொந்த ஊருக்கு போக கூடாது என்றும் அறிவித்தது.

இந்நிலையில், இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது வெள்ளை மாளிகை. புது நடைமுறை யாருக்கெல்லாம் பொருந்தும் என்று விளக்கம் தந்துள்ளது.
முதலில் ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது, ஒரே ஒரு முறை மட்டுமே செய்யக் கூடிய செலவு. அதாவது, இந்த கட்டணம், விசா விண்ணப்பிக்கும்போது மட்டுமே வசூலிக்கப்படும். இதனால், நிறுவனங்கள் இந்த செலவை, தொடர்ச்சியான செலவாக கருத அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை தற்போது, இந்த H-1B விசா வைத்துள்ளோருக்கு பொருந்தாது. ஏற்கனவே இந்த விசா மூலம், அமெரிக்காவுக்கு வந்தவர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு போய் இருந்தாலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் அல்லது அவசர அவசரமாக அமெரிக்கா வர வேண்டிய அவசியமோ இல்லை.
அடுத்ததாக, இந்த நடைமுறை விசா, ரினிவல் அல்லது தற்போதைய விசா ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது.

புதியதாக, ஊழியர்களை சேர்க்க விரும்பும் நிறுவனம் ஒரு லட்சம் டாலர் செலுத்துவது கட்டாயம். இந்த H-1B விசாக்கள் ஆண்டுக்கு ஒரு முறை லாட்டரி மூலம் விநியோகிக்கப்படுவதால், இது அடுத்த ஆண்டில் இருந்து, புதிய நடைமுறையால், 2026ல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் பாருங்கள்: அமெரிக்காவோட H-1B விசா பற்றிய அறிவிப்பு! | H1BVisa | AmericaVisa | USVisaUpdate

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
9 hrs 6 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau