news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கன மழை: வானிலை மையம் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கன மழை: வானிலை மையம் எச்சரிக்கை

வரும் 17, 18ஆம் தேதி கவனம் தேவை

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

தமிழகத்தில் இன்று தொடங்கி, ஐந்து நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் 17ஆம் தேதி, 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17, 18ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

வடக்கு ஆந்திர, தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்திஸ்கர் பகுதிகளில் கரையை கடக்கிறது.
இதனால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


செப்.15 ஆம் தேதி: திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை
செப்.16 ஆம் தேதி: ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை
செப்.17 ஆம் தேதி: கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 21 மாவட்டங்களில் கனமழை

செப்.18ஆம் தேதி:
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை

இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பாருங்கள்: இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு | Rain Update | Rain News | Weather Update

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

5
3 mins agoshare
தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved