news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு
tv

Also Watch

tv

Read this

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

வானிலை தகவல்

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை, செப்.26ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மேற்கு திசையில் நகரும். தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் பட்சத்தில், அது தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் செப்.27ஆம் தேதி காலை நேரம் கரையை கடக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதனால், நாளை செப்.26ஆம் தேதி முதல் அக்.1ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


தமிழகத்தில் நாளை, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் செப்.27ஆம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


வரும் செப்.28ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இன்று காலை 8.30 மணி நிலவர மழை பொழிவு
மயிலாடுதுறை, மணல்மேடு - 6 செமீ
செம்பனார்கோயில், தரங்கம்பாடி, மயிலாடுதுறை - 4 செமீ

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, பேச்சிப்பாறை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - 3 செமீ

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
8 hrs 33 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau