Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற உள்ளதாக முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணங்களில் இதுவரை 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது 17 ஆயிரத்து 600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும், அவை வெறும் எண்கள் அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் உள்ள டாக்டர் அம்பேத்கர் இல்லத்தை பார்வையிட்டார். லண்டனில் எல்.எஸ்.இ-யில் அம்பேத்கர் படித்த போது, தங்கியிருந்த வீட்டை பார்வையிட்டதாகவும், அதன் அறைகள் வழியே நடந்து சென்றபோது பிரமிப்பாக இருந்ததாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் வரலாற்றுப் படத்தை பார்வையிட்டது உணர்ச்சிமிக்கது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved