news-tamil-logo

3/19/2026, 2:44:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 20 வயது இளைஞருடன் இல்லீகல்
tv

Also Watch

tv

Read this

20 வயது இளைஞருடன் இல்லீகல்

பதியாபூர், உத்தர பிரதேசம்

Posted on: Feb 12, 2026 10:00 AM

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காலை நேரத்தில் மகனை காண வீட்டிற்கு சென்ற தந்தை. வீட்டின் வராண்டாவில் மகன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கொடூரம். வீட்டிற்குள் மனைவி இல்லாததால் சந்தேகமடைந்த போலீஸ். மனைவியின் செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கையும் களவுமாக பிடித்து விசாரணை. கட்டிய கணவனை மனைவியே வெட்டிக் கொலை செய்தது ஏன்? கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன கோபம்? நடந்தது என்ன?

காணாமல்போன மனைவி மீது சந்தேகமடைந்த போலீஸ்
காலை நேரம், முதியவர் ஒருத்தரு பணம் வாங்குறதுக்காங்க தனது மகன் வீட்டுக்கு போய்ருக்காரு. அப்ப வாசல்ல நின்னு ரன்வீர் ரன்வீர்ன்னு கூப்டுருக்காரு. ஆனா வீட்டுக்குள்ள இருந்து எந்த ஒரு சத்தமும் கேட்கல. இதனால கேட்ட தொறந்துட்டு உள்ள போய்ருக்காரு தந்தை. அப்ப வரண்டாவுல மகன் ரன்வீர், உடல் துண்டு துண்டான நிலையில ரத்த வெள்ளத்துல உயிரிழந்து கிடந்துருக்காரு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச தந்தை மகனோட சடலத்த கட்டிப் பிடிச்ச அழுது, போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுருக்காரு. இதனால சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சு விசாரணையில இறங்குனாங்க. வீட்டுக்குள்ள வேற யாராச்சும் இருக்காங்களான்னு உள்ள போய் பாத்துருக்காங்க. அப்ப ரன்வீரோட மனைவியையும் அவரோட குழந்தையவும் காணல. இதனால போலீசாருக்கு ரன்வீரோட மனைவி மேல சந்தேகம் திரும்பிருக்கு.

செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து விசாரித்த போலீஸ்
அதுபடி, மனைவி பூஜாவ பல இடங்கள்ல தேடி அலைஞ்சுருக்காங்க போலீஸ். ஆனா எங்க தேடியும் காணல. இதனால பூஜாவோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க போலீஸ். அப்ப சிக்னல் அதே கிராமத்துல உள்ள வீட்ல காட்டிருக்கு. இதனால நேரா அங்க போன போலீஸ் பூஜாவையும் வீட்ல இருந்த மற்றொரு இளைஞரையும் கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. அதுல தான் பல உண்மை தகவல்கள் வெளிய வந்துருக்கு.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவி
உத்தரபிரதேசத்துல உள்ள பதியாபூர் கிராமத்த சேந்த ரன்வீர் சிங் யாதவுக்கு மதுராவைச் சேந்த பூஜா-ங்குற பெண் கூட கடந்த 2018ஆம் வருஷத்துல கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கு. கல்யாணமாகி ஒரு வருஷம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு இடையில டெய்லி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு எப்பவுமே இவங்களுக்குள்ள சண்டையும் சச்சரவுமாவே இருந்துருக்கு.

அர்பித் என்ற இளைஞருடன் பழகி வந்த மனைவி பூஜா

இதனால பூஜா கணவன் கூட சண்டை போட்டுட்டு அடிக்கடி தாய் வீட்டிற்கு போய்ருக்காங்க. மனைவி போனதுக்கு அப்புறம் தனிமையில இருந்த கணவன் அவங்கள சமாதானப்படுத்தி பல முறை வீட்டுக்கு கூப்டு வந்துருக்காரு. ஆனா அப்பவும் திருந்தாத கணவன், மனைவி கூட சண்டை போடுறதையே வழக்கமாகவும் வச்சுருந்துருக்காரு. இதுக்கிடையில பூஜாவுக்கு அதே கிராமத்த சேந்த அர்பித் என்ற இளைஞர் கூட பழக்கம் ஏற்பட்டிருக்கு. ஆரம்பத்துல நார்மலா பேச ஆரம்பிச்ச ரெண்டு பேரும் எல்லை மீறி பழக ஆரம்பிச்சுருக்காங்க. கணவனுக்கு தெரியாம, பூஜா தன்னோட கள்ளக்காதலன் கூட பல இடங்கள்ல ஊர் சுத்திட்டும் இருந்துருக்காங்க. இது தெரிஞ்சு கடும் கோபமான கணவன் மனைவி கூட சண்டை போட்ருக்காரு. கட்டுன கணவன் நான் உயிரோட இருக்கும் போது, எதுக்கு 20 வயசு இளைஞர் கூட பழகிட்டு இருக்க, உன்னால என் மானமே போய்ருச்சு, தயவு செஞ்சு இனிமேலாவது ஒழுக்கமா இருன்னு மனைவிய அடிச்சு கண்டிச்சுருக்காரு.

அர்பித், பூஜாவை கைது செய்து போலீசார் விசாரணை
ஆனா, இத காது கொடுத்துக் கூட கேட்காத மனைவி, அர்பித் கூட தொடர்ந்து பழகிட்டு இருந்துருக்காங்க. அதுமட்டும் இல்லாம தன்னோட கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக இருக்குறாத நினைச்ச காதலன் கூட சேந்து ரன்வீர் சிங்க கொலை செய்யவும் திட்டம் போட்ருக்காங்க. அதுபடி சம்பவத்தன்னைக்கு கணவன் கிட்ட பாசமா நடந்துக்கிட்ட மனைவி அவருக்கு மதுவாங்கி கொடுத்துருக்காங்க. மனைவி வாங்கி கொடுத்த மதுவ குடிச்ச கணவன், ஃபுல் போதையாக நிற்க முடியாம தள்ளாடிருக்காரு. அந்த நேரத்துல தனது காதலன ஃபோன் பண்ணி வரவச்சுருக்காங்க மனைவி. அடுத்து ரெண்டு பேரும் சேந்து ரன்வீர கோடாரியால துண்டு துண்டா வெட்டிருக்காங்க. இதனால சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த ரன்வீர் உயிரிழந்துட்டாரு. கணவன் உயிரிழந்ததுக்கு அப்புறம் மனைவி தன்னோட குழந்தைய கூப்டுட்டு காதலன் கூட அவரோட வீட்டுக்கு போய்ருக்காங்க. ஆனா விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி பூஜாவையும், அவரோட காதலன் அர்பித்தையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்

மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 56 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved