news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பாதுகாப்பாக, வெற்றிகரமான பயணம்; மெட்ரோ ரயிலில் பயணித்த ’இதயம்’
tv

Also Watch

tv

Read this

பாதுகாப்பாக, வெற்றிகரமான பயணம்; மெட்ரோ ரயிலில் பயணித்த ’இதயம்’

பெங்களூரு

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
heart

பெங்களூருவில், மெட்ரோ ரயில் மூலம், ஒரு இதயம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம், பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஒரு மனித உறுப்பு, வெற்றிகரமாக கொண்டு செல்லப்படுவது, இரண்டாவது முறையாகும்.
யஷ்வந்த்பூர் ஸ்பார்ஷ் மருத்துவமனையில் இருந்து, சேஷாத்ரிபூர் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. யஷ்வந்த்பூர் இன்டஸ்ட்ரி மெட்ரோ நிலையத்திலிருந்து சம்பிஜ் சாலை நிலையத்திற்கு மெட்ரோ மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

ஸ்பார்ஷ் மருத்துவமனையில் இருந்து, யஷ்வந்த்பூர்-க்கு ஆம்புலன்ஸ் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சம்பிஜ் சாலை மெட்ரோ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், சேஷாத்ரிபூர் அப்பல்லோ மருத்துவமனைக்கு இதயம் மாற்றப்பட்டது.

இதயத்தை எடுத்துச் செல்வதற்காக, மெட்ரோ ரயிலின் ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல் இயங்கும் பயணிகள் ரயிலில் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 11.1க்குப் புறப்பட்ட ரயில், இரவு 11.21க்கு சம்பிஜ் சாலை மெட்ரோ நிலையத்தை அடைந்தது. யஷ்வந்த்பூர் - சம்பிஜ் மெட்ரோ நிலையத்திற்கும் இடையில் ஏழு மெட்ரோ நிலையங்கள் உள்ளன. யஷ்வந்த்பூரில் இருந்து சம்பிஜ் சாலை மெட்ரோ நிலையத்தை அடைய 20 நிமிடங்கள் மட்டுமே ஆனது. அப்போது மெட்ரோ பாதுகாப்பு அதிகாரிகளும் மருத்துவர்களும் உடனிருந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 16 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved