news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கெனிஷாவுக்கு விடாமல் விழும் அடி, அவதூறு வழக்குகளால் சிக்கல்
tv

Also Watch

tv

Read this

கெனிஷாவுக்கு விடாமல் விழும் அடி, அவதூறு வழக்குகளால் சிக்கல்

பணத்தை வாங்கினாரா? இல்லையா?

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆர்த்தி அவதூறு வழக்கில் சிக்கி, மன காயமுற்ற கெனிஷா, ரவி மோகனை விட்டு பிரிந்த நிலையில், அவருக்கு மற்றொரு அவதூறு வழக்கில் துபாய் நீதிமன்றம் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்துள்ளது. ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளான கெனிஷா திரும்பிய பக்கமெல்லாம் அடி விழுவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சென்னை உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து...
சென்னை உயர்நீதிமன்றத்தால் கண்டனங்களுக்கு ஆளான ரவி மோகனின் நெருக்கமான தோழி கெனிஷாவின், மனதை மேலும் ரணப்படுத்தி இருக்கிறது துபாய் நீதிமன்றம்.
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போதே ரவி மோகனும், கெனிஷாவும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதனால் கெனிஷாவை இணையவாசிகள் வசைபாடி வந்த நிலையில், தன் மீது அவதூறு கருத்துகளை கெனிஷா தெரிவித்து வருவதாக ஆர்த்தி வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு விசாரணையில் ஆர்த்தி குறித்து கருத்து பதிவிட கெனிஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கவே, மனமுடைந்த கெனிஷா, ரவி மோகனுடன் பிரேக் அப் செய்து சென்னையை விட்டே கிளம்புவதாக அறிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தை அடுத்து துபாய் நீதிமன்றத்தால் கெனிஷாவுக்கு அடி விழுந்துள்ளது.

பாடல் நிகழ்ச்சியில்...
துபாயில் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனக்கு பேமெண்ட் தரவில்லையென சமூக ஊடகங்களில் கெனிஷா கருத்து பதிவிட்டு இருந்தார். அதனை அவரது தோழி அருணாவும் ஷேர் செய்திருந்த நிலையில், தாங்கள் அவருக்கு பணம் கொடுத்துவிட்டதாக அந்நிறுவனம் துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணையில் கெனிஷாவும், அவரது தோழியும் அந்நீதிமன்றத்தில் ஆஜராக நிலையில் அவர்களின்றியே விசாரணை நடந்து வந்தது.


துரத்தும் சர்ச்சை
கெனிஷாவுக்கு பேமெண்ட் செய்ததாக கூறப்படும் ரசீது உள்ளிட்ட ஆவணங்களை அந்நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்பித்த நிலையில், அவதூறு செய்தியை பரப்பியதாக ஐக்கிய அரபு அமீரக இணைய குற்றச்சட்டத்தின் கீழ் இருவரும் குற்றவாளிகள் என துபாய் நீதிமன்றம் அறிவித்தது. இருவருக்கும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 684 ரூபாய் அபராதத்தையும் விதித்தது. ஆர்த்தி ரவி வழக்கில் கண்டனங்களுக்கு ஆளான கெனிஷா மற்றொரு அவதூறு வழக்கில் சிக்கியது அவரை மனவேதனையில் தள்ளி இருக்கிறது. ரவி மோகனை விட்டு சென்றாலும் சர்ச்சைகள் விடாமல் கெனிஷாவை துரத்தி கொண்டு தான் வருகிறது.

Related Link
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை என ரவி மோகன் உறுதி

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை என ரவி மோகன் உறுதி

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
12 hrs 17 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau