news-tamil-logo

3/19/2026, 1:20:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திரிஷாவை கோபமாக்கிய நயினார்
tv

Also Watch

tv

Read this

திரிஷாவை கோபமாக்கிய நயினார்

3 நாளுக்கு பிறகு மனப்பூர்வ வருத்தம்

Posted on: Feb 17, 2026 08:03 AM

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

த.வெ.க. தலைவர் விஜய் உடன் தொடர்புபடுத்தி தம்மை பற்றி இழிவாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகை திரிஷா, தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதிப்பதா? என பொங்கி எழுந்துள்ளார். திரிஷா குறித்த கருத்துக்காக கடும் கண்டனம் எழுந்த நிலையில், கடைசியில் எதிர்ப்புக்கு பணிந்து நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

வெளியே வர வேண்டும்
விஜய்யை விமர்சிப்பதாக நினைத்து சம்பந்தமே இல்லாமல் நடிகை திரிஷா குறித்து வார்த்தையை விட்ட நயினார் நாகேந்திரன் தற்போது வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு ஆளானது தான் சோகம்.
சேலத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்க்கு எதுவுமே தெரியாது என்றதோடு, முதலில் விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும் என பேசினார்.

சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை
விஜய் உடன் திரிஷாவை தொடர்புபடுத்தி நயினார் நாகேந்திரன் பேசியது அரசியல் களத்திலும், சினிமாவிலும் புயலாக மாறியது. த.வெ.க. தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழ, திமுகவில் இருந்து கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சமூக வலைதளத்திலும் விமர்சன யுத்தம் கிளம்பியது. அரசியல் ரீதியாக விஜய்யை விமர்சிக்காமல், தனிப்பட்ட ரீதியில், பொது வெளியில் இயங்கும் பெண்ணை சம்பந்தப்படுத்தி நயினார் பேசியதை சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை.

தன்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை...
இந்த நிலையில் தான், நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலடி கொடுத்து, தனது வழக்கறிஞர் மூலம் நடிகை திரிஷா அறிக்கை வெளியிட்டார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் விவாதிப்பது சரியல்ல எனக் கூறியிருக்கும் த்ரிஷா, ஒரு கட்சியின் மாநில பொறுப்பில் இருந்து கொண்டு அருவருக்கத்தக்க வகையிலும் முறையற்ற வகையிலும் பேசுவார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தாம் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என குறிப்பிட்டுள்ள திரிஷா, எதிர்காலத்திலும் அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார். அதோடு, உயரிய பதவிகளில் இருப்பவர்கள் பொது வெளியில் பேசும் போது பொறுப்போடும், நிதானத்தோடும் பேச வேண்டும் எனக் கூறியுள்ள திரிஷா, தனக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தன்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மனப்பூர்வமாக வருத்தம்
திரிஷாவின் கண்டன அறிக்கை வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், வருத்தம் தெரிவித்து இருக்கிறார். வழக்கமாக தாம் யார் மீதும் தனிப்பட்ட விமர்சனங்களை வைத்தது இல்லை எனக் கூறியுள்ள நயினார் நாகேந்திரன், அன்றைய தினம் வாய் தவறி அப்படி பேசி விட்டதாகவும், வானதி ஸ்ரீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் தன்னிடம் பேசினார்கள் எனவும், திரிஷா குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய மறு நொடியே அவருக்கு எதிராக கண்டனம் எழ தொடங்கியது.

இருப்பினும் கூட 3 நாட்களாக அமைதி காத்து வந்த நயினார் நாகேந்திரன், கடும் எதிர்ப்பை அடுத்து பணிந்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
எந்த கட்சியிலும் நான் இல்லை - திரிஷா

எந்த கட்சியிலும் நான் இல்லை - திரிஷா

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 33 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved