Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் உடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவி ஏற்பு விழா கோலாகலம்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

முதல்வராக விஜய்
இதனையடுத்து தமிழகத்தின் 18ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

9 அமைச்சர்கள் யார் யார்?
விஜய்யை தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா
கே.ஜி.அருண்ராஜ்

கே.ஏ.செங்கோட்டையன்

வெங்கடரமணன்
நிர்மல்குமார்

ராஜ்மோகன்
டி.கே.பிரபு

கீர்த்தனா உள்ளிட்டோருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்புக்குப் பிறகு அமைச்சர்கள் அனைவருக்கும் முதல்வர் விஜய் கைகுலுக்கி, வாழ்த்து தெரிவித்தார்.

பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.