news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 22 - 29 வயதுக்குள் ஒரு கோடி பேர்
tv

Also Watch

tv

Read this

22 - 29 வயதுக்குள் ஒரு கோடி பேர்

வேட்பாளரின் வண்ண புகைப்படம்

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து சென்னையில் ஆலோசனை மேற்கொண்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களை எளிதில் கண்டறியும் வண்ணம், வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் 22 வயது தொடங்கி 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் ஒரு கோடி பேர் இருப்பதாகவும், முதன் முறை வாக்காளர்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்தார். தேர்தல் ஆணையர்கள் சுக்பிர்சிங் சந்து, விவேக் ஜோஷி, முதுநிலை துணை தேர்தல் ஆணையர் மனீஷ் கார்க், துணை தேர்தல் ஆணையர் சஞ்ஜய் குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோருடன் இணைந்து, அரசியல் கட்சிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள், ஐஜிக்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி, ஐடி, ஈடி, கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தமிழில் பேச்சு
செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, 'தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா' என தமிழ் மொழியில் பெருமை பட தெரிவித்தார்.

தகுதியான ஒரு வாக்காளரும் நீக்கப்படவில்லை
இதனை தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதாவது:
மக்களாட்சியின் தாயகமாக இந்தியா விளங்குகிறது. தேர்தல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் 172 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் 10ஆம் நூற்றாண்டில் உத்திரமேரூர் குடவோலை முறை தேர்தல் குறித்து தெரிவித்தேன், அதை அறிந்து உலக நாடுகளே வியந்தன. தமிழகத்தில் 188 பொது தொகுதிகள், 44 எஸ்சி தொகுதிகள், 2 எஸ்டி தொகுதிகள் என மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழக வாக்காளர் பட்டியல் தூய்மையாக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்ட பிஎல்ஓக்களை இந்த மேடையில் கவுரவித்தோம். முதன் முறையாக வாக்காளர் ஆனவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கி கவுரவித்தோம். இந்த எஸ்ஐஆர் பணியில் தகுதியான ஒரு வாக்காளரும் நீக்கப்படவில்லை. தகுதியில்லாத ஒருவரும் வாக்காளராக சேர்க்கப்படவில்லை. வெறும் 216 ஆட்சேபனை மனுக்கள் மட்டுமே வந்தன. இதுவே எஸ்ஐஆரின் வெற்றியை காட்டுகிறது.

தமிழகம் தொடர்ந்து முன்மாதிரி

தேர்தல்களின் போது இந்திய சட்டங்கள், பணப் புழக்கத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறது. சட்ட விதிகளை மீறினால் பணம் பறிமுதல் செய்யப்படும். வர்த்தகர்கள் மற்றும் சிறு வணிகர்கள் அனுமதிக்கப்பட்ட சட்ட வரம்புக்கு மேல் பணத்தை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். சட்டப்படி, 100 சதவீதம் வாக்களிப்பு கட்டாயமில்லை என்றாலும், தமிழகம் தொடர்ந்து முன்மாதிரியான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. அதனால் வரும் தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறும். இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக விழிப்புணர்வு கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் முழு நிர்வாக இயந்திரமும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன.

எத்தனை கட்டங்களாக தேர்தல்?
சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவதில் தமிழகம் இன்னும் உயர்ந்த தரத்தை அடையும், புதிய சாதனைகளை படைக்கும்.
அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடனும் நாங்கள் விரிவான கலந்துரையாடலை நடத்தினோம். அவர்களில் பெரும்பாலோர் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பரிந்துரைத்தனர். அனைத்து பரிந்துரைகளையும் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. இருப்பினும், அனைத்து தொடர்புடைய காரணிகளையும் பரிசீலித்த பிறகு, தேர்தல் எத்தனை கட்டங்களாக நடத்தப்படும் என்பதை ஆணையம் முடிவு செய்யும்.

சிறப்பாக தமிழக தேர்தல் நடத்தப்படும்
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்க புதிய உத்திகள் பயன்படுத்தப்படும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த காலத்தை விட வேறுபட்டதாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருந்தாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தீவிரமாக கண்காணிக்கப்படும். பீகார் மாநில தேர்தலை விட சிறப்பாக தமிழக தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Link
சென்னையில் ED இயக்குநர், திமுகவுக்கு சிக்கலா?

சென்னையில் ED இயக்குநர், திமுகவுக்கு சிக்கலா?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
9 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved