news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மூன்று நாட்கள் தொடர் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

மூன்று நாட்கள் தொடர் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை தகவல்

எட்டு மாவட்டங்களுக்கு ’அலெர்ட்’

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவல்:

தமிழகம் உள்பட தென் மாவட்டங்களின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம்.

நாளை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும், சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

தென் மாவட்ட கடலோர பகுதி, அதை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 40 - 50 கிமீ மற்றும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.


மழை பதிவு நிலவரம்:
விழுப்புரம் - செஞ்சி, சிவகங்கை - திருப்புவனத்தில் அதிகபட்சமாக தலா 10 செமீ
வல்லம், சென்னை மணலி புதுநகரில் தலா 9 செமீ
விழுப்புரம் - ஆனந்தபுரம், பெரம்பலுார் - செட்டிகுளம், திருச்சி - வத்தலை அணைக்கட்டு பகுதிகளில் தலா 7 செமீ
சேலம் - ஏற்காட்டில், 6 செமீ மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
5 hrs 27 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved